பெங்களூரு : மடிகேரியில் சித்தராமையா கார் மீது, பா.ஜ., உறுப்பினர்கள் முட்டை வீசிய சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் நேற்று காரசார வாதம் நடந்தது.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:காங்., — சித்தராமையா: எதிர்க்கட்சி தலைவரின் கார் மீது, முட்டை வீசும்படி செய்த பா.ஜ., தலைவர்கள் வீரரா, சூரரா. மழை சேத பகுதிகளை பார்வையிட, குடகு மாவட்டத்துக்கு சென்றேன்.
அப்போது பா.ஜ., தொண்டர்கள், இரண்டு இடங்களில் என் கார் மீது முட்டை வீசினர்.முட்டை வீசிய பின், பின்னாலிருந்து கல் வீச்சு நடத்தினர். நான் மனம் வைத்தால், மாநிலம் முழுதும், உங்கள் மீது முட்டை வீசும்படி செய்வேன்.எதிர்க்கட்சி தலைவர் மீது முட்டை வீசுவோர் மீது, நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, இவர்களுக்கு பா.ஜ., தலைவர்கள் ஊக்கமளித்தனர்.அன்று, ரெட்டி சகோதரர்கள், பல்லாரிக்கு வாருங்கள் என, எனக்கு சவால் விடுத்தனர். எனவே பல்லாரிக்கு பாதயாத்திரை நடத்தினேன்.
அதேபோன்று, குடகுக்கு வாருங்கள் என, போப்பையா அழைத்தார்.பா.ஜ., — போப்பையா: குடகுக்கு வாருங்கள். எங்கள் வீட்டு நாயும் வரவேற்கும் என, கூறியிருந்தேன்.சித்தராமையா: பா.ஜ., தொண்டர்களை விட்டு போராட்டம் நடத்தியதுடன், முட்டையும் வீசினர். இதை கண்டித்து குடகில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முன் வந்ததும், 144 தடையை அமல்படுத்தினர்.இவ்வாறு அவர் கூறியதும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே, கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர். இதனால், சட்டசபையில் சில நிமிடங்கள் குழப்பமான சூழல் உருவானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement