ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு – தமிழக அரசின் அறிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் சார்பாக குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்.,) 2023 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் சென்னை, அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள். கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 28.05.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது.

சென்னை. அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம். காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர். மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் _”civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.

மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் தகுதியுடைய நபர்கள் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு. தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் 2022 டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.