கோதுமை, கடுகு உட்பட 6 விளைபொருளுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு – அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: கோதுமை கடுகு உட்பட 6 விளை பொருள்களுக்கு எம்எஸ்பியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு தற்போது ராபி மற்றும் காரிப் பருவத்தில் விளைவிக்கப்படும் 23 விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயிக்கிறது.

இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடியது. இதில் கோதுமை உட்பட 6 விளைபொருள்களுக்கான எம்எஸ்பி உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 2021-2022-ம் ஆண்டில் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015-ஆக இருந்தது. இது ரூ.2,125 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமையின் உற்பத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.1,065 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடுகின் எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டு ரூ.5,450 ஆக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்லியின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,635-லிருந்து, ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருப்புவகைகளின் எம்எஸ்பி ரூ.5,230-லிருந்து ரூ.5,335 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மைசூர் பருப்பின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.