சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலையை அதிமுக ஆட்சி வழங்கவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
