பிக்பாஸ் வைத்த டாஸ்க்கால் வந்த வினை: பழிக்கு பழி; மைனா நந்தினி வியப்பு

பிக்பாஸ் வீட்டில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க கதை சொல்லும் நேரம் டாஸ்க் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தவாரம் டைரக்ட் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறமாட்டார்கள். டாஸ்க் தொடங்கி முதல் 60 நொடிகளுக்குள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் 3 பசர்களை அடித்துவிட்டால் அவர்கள் அதற்கு மேல் தங்களின் கதையை தொடரக்கூடாது. ஒருவேளை 3 பசர்கள் வராவிட்டால் அவர்கள் தங்களின் கதையை தொடரலாம். இதுதான் பிக்பாஸ் கொடுத்திருக்கும் விதிமுறை.

இதனடிப்படையில் தனலட்சுமி முதல் ஆளாக, தன்னுடைய கதை மூலம் அடுத்த வாரம் டைரக்ட் நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். அடுத்ததாக வந்த ஜனனி, ஆயிஷா, அஸீம் ஆகியோரின் கதைகளை கேட்க, மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் தயாராக இல்லாததால் அவர்கள் தங்களின் கதையை பாதியிலேயே முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக ஜனனியின் கதை நன்றாக இருப்பதாக பார்வையாளர்கள் உணர்ந்த நிலையில், வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அவரின் கதையை கேட்க தயாராக இருக்கவில்லை. இதனால் அவர் கண்ணீருடன் தான் சொல்ல வந்த கதையை சொல்ல முடியாமல் பாதியிலேயே நிறுத்தி வீட்டிற்குள் வந்தார். 

நேற்று வரை ஒரு சிலர் மட்டுமே முடித்திருந்த அந்த டாஸ்க், இன்றும் தொடர்கிறது. அதில் மைனா உள்ளிட்டோர் தங்களின் கதையை சொல்கின்றனர். மகேஷ்வரி கதையை சொல்ல ஆரம்பித்தவுடன் அவருக்கு அடுத்தடுத்து 3 பசர்களை அழுத்தி, நீங்கள் கதை சொல்லாமல் வெளியே வாருங்கள் என ஹவுஸ்மேட்ஸ் சொல்லிவிட்டனர். அடுத்ததாக மைனா நந்தினி செல்கிறார். அவருடைய கதையை கேட்ட போட்டியாளர்களில் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் 60 நொடிகளுக்குள் பசரை அழுத்திவிடுகின்றனர். ஆனால் இன்னும் ஒருவர் அடிக்காததால் மைனா குழப்பமடைகிறார். 3 பேர் பசர் அழுத்தினால் தான் கதையை நிறுத்த வேண்டும். அந்தவகையில் மைனாவின் கதையை கேட்க ஹவுஸ்மேட்ஸ் தயாராக இருப்பதால், அவர் டைரக்ட் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.