உசிலம்பட்டியில் எலான் மஸ்க்கின் சாட்டிலைட்… ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!

டவிட்டர் நிறுவனத்தை பிரபல பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கி உள்ளார். இதனை உறுதிபடுத்தும் விதமாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமை செயலகத்திற்கு கையில் சிங்க் உடன் உள்ளே சென்ற மிக வைரலாக மாறியது.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடனே அதன் சிஇஓ ஆக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் என்பவர் உட்பட சில உயர் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்தார். இந்நிலையில், ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் ட்விட்டரில் தனது கட்டண விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறி இருந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இரவு 7 மணியளவில் திடீரென விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். வானில் பறக்கும் இரயில் போன்று சென்ற இந்த ஸ்டார்லிங்க் – எலான் மஸ்க் -ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பு என கூறப்படுகிறது.

உசிலம்பட்டி பகுதியில் தென்பட்ட இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் தொகுப்பை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாக வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.