காங்கிரஸ் எம்எல்ஏ நீக்கம்?; தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தொடங்கி மாநிலத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கட்சிகளுமே வாக்குச்சாவடி முகவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்தவகையில் நாடாளுமன்றத்தேர்தலில்

கட்சியின் செயல்பாடு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வந்து இருந்தனர்.

அப்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறிவிட்டு அம்மைதிப்படுத்த முயன்றார். இதற்காக, ரூபி மனோகரனிடமும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கே.எஸ். அழகிரியின் காரை மறித்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த திடீர் மோதலில் களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் டேனியல், ராபர்ட் ஆகிய 3 பேர் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் 100க்கு மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து, மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏவான ரூபி மனோகரன் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரூபி மனோகரன் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்தே நீக்கப்படுவார் என்று, கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சி மட்டும் அல்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.