தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை நீக்க கோரும் நெல்லை காங்கிரஸார்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களை அடியாட்களை கொண்டு தாக்கிய மாநில தலைவர் கே எஸ் அழகிரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவுனில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து கே. எஸ்  அழகிரி, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் ஆகியோரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் 15 வட்டார தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நெல்லையில் 12 வட்டார பதவிகளுக்கு தேர்தல் நடத்தாமல் பணம் வாங்கி  கே. எஸ் அழகிரி பதவிகளை வழங்கி இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இது தொடர்பாக முறையிட சென்ற நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களை, கே. எஸ் அழகிரியின் அடியாட்களை வைத்து கடந்த 15 ம் தேதி தாக்கினார்கள் என்று கூறிய அவர்கள், கே. எஸ் அழகிரிக்கும், ரூபி மனோகரனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

எதிர்வரும் 24 ம் தேதியன்று, சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நடத்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் அழைத்து விசாரணை   நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய அழகிரிக்கு அருகதை இல்லை அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கே.எஸ் அழகிரி, மாநில காங்கிரஸ் தலைவராகத் தொடர்ந்தால், நெல்லை மாவட்டம் முழுவதும், ஒன்றியம் மற்றும் நகரம் என அனைத்துப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளேயே காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள் அதுவும் அடியார்களை கொண்டு தாக்குவதால் எங்களுக்கு காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பயமாக இருக்கிறது என்று நெல்லை மாவட்ட காங்கிரஸார் அச்சம் தெரிவித்தனர். 

ஆகவே இவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாங்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவரிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தாமலேயே தற்போது வட்டார தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டினார். 

காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பவர்களிடம் அதிகமாக பணம் கொடுத்து உள்ளதால் அவர்கள் வட்டார தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாகவும் நாங்கள் மேல் இடத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம் என்று கூறிய நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தற்போது நெல்லை மாவட்டத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறோம் என தெரிவித்தனர் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.