ஐ.சி.எப்.பி., எனப்படும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்துக்கான சர்வதேச கூட்டமைப்பின் மாநாடு, தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நேற்று நடந்தது.
இதில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நாடுகளுக்கு விருது வழங்கப்பட்டது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக செயல்படும் நாடு என்ற பிரிவில் இந்தியாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது, குடும்ப கட்டுப்பாடு முறையில் நவீன கருத்தடை முறைகளை அமல்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ”குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த பிரிவில் இந்தியா மட்டுமே விருது பெற்றுள்ளது.
மத்திய பா.ஜ., அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்த பெருமை நமக்கு கிடைத்துள்ளது,” என, தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement