இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு – கரகோஷத்தால் அதிர்ந்த பனையூர்

விஜய் மக்கள் இயக்கத்தின் நான்கு மாவட்ட நிர்வாகிகள் சென்னையை அடுத்த பனையூரில் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார்.  

விஜய் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய்  மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வைத்தார். சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு புகைப்படத்துடன கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. அதில், பெயர், தந்தை பெயர், ஊர், ஆதார் எண், தொகுதி, வகிக்கும் பதவி, தொலைபேசி எண், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. ஆலோசனையில் கலந்து கொள்ளும் நபர்கள் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்,

image

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, தமிழகத்தில் 15 மற்றும் 16 இடங்களில் தான் விஜய் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொடை கொடுக்கக் கூடிய இயக்கம் மக்கள் இயக்கம் தான். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என ஒரு நாளைக்கு 40லிருந்து 50 க்கு மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் ஏழைகளுக்கு உணவு மற்றும் பால் வழங்கும் திட்டத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மேலும் மாவட்டத் தலைவர்கள் அனைவரும், நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

தளபதியுடன் ஒரு முறை போட்டோ எடுத்துக்கொண்டு 47 முறை போட்டோ எடுத்துக் கொண்டதாக சிலர் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் இயக்கத்திற்காக. உழைக்க கூடிய எந்தவொரு ரசிகனுடனோ,,  தொண்டனுடனோ மட்டும்தான் தளபதி விஜய் போட்டோ எடுத்துக் கொள்வார். நடிகர் விஐய்க்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தற்போது, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது போல் பிற மாவட்ட நிர்வாகிகளுடன் இதே போல் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.