தோகா : உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் இ பிரிவில் தோகா பகுதியில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
