கல்லறை காவலாளியான அழகிய சீன இளம்பெண்: மாதம் 45,000 ஊதியம்! வியப்பில் இணையவாசிகள்


சீனாவில் கல்லறை காவலாளியாக பணிபுரிவது மனநிறைவு தருவதாக அழகிய இளம்பெண் ஒருவர் தெரிவித்து இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

 டிக் டாக்கில் பகிரப்படும் வாழ்க்கை அனுபவம்

சீனாவில் டிக் டாக் பொழுதுபோக்கு செயலி மிகவும் பிரபலமான ஒன்றாக உருவெடுத்துள்ளது, இதில் சீன இளைஞர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதனடிப்படையில் இளைஞர்கள் பலர் அவர்களது பணி சூழல், வீட்டு சூழல், நண்பர்கள் கூட்டம் ஆகியவற்றை டிக்டாக் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.

கல்லறை காவலாளியான அழகிய சீன இளம்பெண்: மாதம் 45,000 ஊதியம்! வியப்பில் இணையவாசிகள் | Chinese Woman Has Chosen To Work In A Cemeterycemetery – கல்லறை

இந்நிலையில் சீனாவின் டான் என்ற 22 வயது இளம் பெண் டிக் டாக்கில் தனது வாழ்க்கை பணியை வெளிப்படுத்தும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்லறையில் அமைதி

சீன இளம்பெண் டான் அந்த பதிவில், நான் எனது பணியின் சூழலை காண்பிக்க போகிறேன், இங்கு எந்த அலுவலக அரசியலும் கிடையாது, பூனைகள், நாய்கள் என அனைவரும் இங்கு உள்ளனர்.

நான் இங்கு தான் வாழ்கிறேன், இங்கே வரும் விருந்தினர்களை நான் நன்கு கவனித்து கொள்கிறேன் என தெரிவித்து தனது கல்லறை பணியை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் இறந்தவர்களின் உறவினர்கள் சார்பாக கல்லறையை சுத்தம் செய்து பூக்களால் அவற்றை அலங்கரிப்பேன், காலை 8:30 மணிக்கு தொடங்கும் எனது பணி மாலை 5 மணி அளவில் நிறைவடைகிறது, இடையே எனக்கு 2 மணி நேரம் உணவு இடைவேளையும் உண்டு என தெரிவித்துள்ளார்.

கல்லறை காவலாளியான அழகிய சீன இளம்பெண்: மாதம் 45,000 ஊதியம்! வியப்பில் இணையவாசிகள் | Chinese Woman Has Chosen To Work In A Cemetery Chinese woman Tan – சீன பெண் டான்

இந்த பணிக்காக இளம்பெண் டான், இந்திய ரூபாய் மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டானின் இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் வியப்படைந்தாலும், நவீன உலகத்தில் இது தான் அமைதியானது என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.