ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – போக்குவரத்து கழகம் எச்சரிக்கை.!

மாநகரப் பேருந்துகளில் 10, 20 ரூபாய் வாங்காத நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் அறிமுகம் படுத்தியது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் அதிக காலம் பயன்படுத்திட முடியும் என்பதால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (₹) இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம் (₹) இருக்காது. ஆகவே ரூபாய் சின்னம் இல்லாத நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கு மக்களே வந்துவிட்டனர். காலப்போக்கில் எந்த 10 ரூபாய் நாணயங்களையும் மக்கள் வாங்க யோசிக்கத் துவங்கிவிட்டனர்.

இதனையடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி நேரடியாக தலையிட்டு பல்வேறு நடவெடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். 

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றமாகும்.

அதன்படி,  இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நாணயங்களை வாங்க மறுப்பவருக்கும் 3 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீதும் இந்த சட்டத்தின்படி புகார் அளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டுக்காக 10, 20  ரூபாய் நாணயங்களை வழங்கினால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு நாணயங்களை வாங்காமல் மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.