இளவரசர் ஹரி அவரது தந்தை கப்பார் சார்லஸிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கடுப்பான சார்லஸ் ஹரியிடம் பேசுவதையே தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகனுக்கும் பேரனுக்கும் இடையில் ராணி
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இறப்பதற்கு முந்தைய மாதம் வரையிலும், தனது மகன் சார்லஸ் மற்றும் பேரன் ஹரிக்கும் இடையிலான பிளவுகளை சரிசெய்ய தொடர்ந்து பல முறை முயற்சித்துள்ளார்.
Getty Images
அமெரிக்காவில் தனது மனைவி மேகன் மார்க்கல் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவரும் இளவரசர் ஹரி, ராணி எலிசபெத் இறப்பதற்கு முன்பு வரை அவருக்கு பலமுறை பணம் கேட்டு போன் செய்துள்ளார்.
ஹரியுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த ராணி, ஆனால் அவர் பணம் கேட்டபோது “நீ ஏன் உன் தந்தையுடன் பேசக்கூடாது?” என கேட்டுள்ளார்.
அதற்கு, தந்தை தனது அழைப்புகளை எடுப்பதில்லை என கூறியுள்ளார் ஹரி.
மேலும், போன் செய்வதற்கு பதிலாக தனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு சார்லஸ் வலியுறுத்தியதாக ஹரி ராணியிடம் முறையிட்டுள்ளார்.
‘நான் ஒன்றும் வங்கி அல்ல’
இதையடுத்து, ராணி சார்லஸிடம் சென்று, ஏன் ஹரியின் அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என கேட்டதாகவும், அதற்கு ராணியிடம் பதிலளித்த சார்லஸ் “நான் ஒன்றும் வங்கி அல்ல” வெறுப்புடன் கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஹரியின் நினைவுப் புத்தகம் வெளிவரவுள்ளதை அறிந்த அரச குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.