ராஜ குடும்பத்தில் பிரச்சினை, இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் சண்டை, மன்னர் சார்லசுக்கும் இளவரசர் ஹரிக்கும் சண்டை என பல செய்திகள் இன்றுவரை வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
பிரச்சினைக்கு யார் காரணம்?
ராஜ குடும்பத்தில் மேகனால் துவங்கிய பிரச்சினை, இளவரசர் ஹரியும் மேகனும் வீட்டை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறுவது வரை செல்ல, அவர்கள் இருவரும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்க, இருவரும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை சரமாரியாக அள்ளி வீச, இன்று ஹரியும் மேகனும் வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் வந்து நிற்கிறது பிரச்சினை.
ஆனால், பிரச்சினை எங்கு, எப்படி துவங்கியது என்பது நினைவிருக்கிறதா?
@AP
பெரிதாகிய பெண்கள் சண்டை
முதன்முதலில் இளவரசிகள் கேட்டுக்கும் மேகனுக்கும் இடையில்தான் பிரச்சினைகள் உருவாகின என்கிறது ஒரு செய்தி.
அதாவது, இளவரசர் ஹரி மேகன் திருமணத்தின்போது சிறுமிகள் பூக்கள் ஏந்தி வருவது தொடர்பான ஒரு விடயத்தில், குட்டி இளவரசி சார்லட்டின் உடை தொடர்பாக அவரது தாயாகிய இளவரசி கேட் ஒரு கருத்தைச் சொல்லியதாகவும், மேகன் அதை புறகணித்ததாகவும், அப்போதுதான் குழந்தை பெற்று வீடு திரும்பியதால் மன அழுத்தத்தில் இருந்த இளவரசி கேட் கண்ணீர் விட்டு அழுததாகவும் ஒரு தகவல்வெளியானது.
@WireImage
ஆனால், மேகன் அமெரிக்க பிரபலமான ஓபரா பேட்டியின்போது, சார்லட் உடை விடயத்தில் பிரச்சினை உருவானது உண்மைதான். ஆனால், தான் கேட்டை அழவைக்கவில்லை, கேட்தான் தன்னை அழவைத்ததாக தெரிவித்திருந்தார்.
இன்னொரு பக்கம், இளவரசர் வில்லியம் தன் மனைவி மேகனுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதால் அவருக்கும் அவரது அண்ணனான இளவரசர் வில்லியமுக்கும் சண்டை வந்ததாகவும் ஒரு செய்தி வெளியானது.
மொத்தத்தில், பெண்கள் சண்டைதான் ராஜ குடும்பத்தில் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.