ஸ்ரீநகர்,:ஜம்மு – காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் மாணவியர் அளித்த பாலியல் புகாரின்படி பல்கலை பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலை மாணவி ஒருவர், ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொமாய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, பல்கலை வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். உடனே பல்கலை பதிவாளர் அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு புகார்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலையில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு மாணவி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை, பாடத்தில் உள்ள சந்தேகத்தை கேட்பதற்காக, தன் பேராசிரியர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர், மாணவியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து, மாணவி அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து, 62 வயதான பேராசிரியரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement