Sharechat நிறுவனத்தை விரைவில் வாங்கப்போகும் Google! என்ன திட்டம்?

Google நிறுவனம் இந்தியாவை சேர்ந்த சமூகவலைத்தளமான Sharechat நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனியாக வங்கி குழு ஒன்றை அமைத்து பேசி வருவதாக தெரிகிறது.

Sharechat நிறுவனம் இந்தியாவில் செப்டம்பர் மாதம் 40 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதனால் அதன் மொத்த முதலீடு 264 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் தற்போதய மதிப்பு 650 மில்லியன் டாலர் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சமூக வலைத்தளம் உலகில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய இந்த வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்றும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்த சமூகவலைத்தளம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் Share chat தெரிவித்துள்ளது.

2022 தொடக்கத்தில் Google நிறுவனம் இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மட்டும் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இப்போது ஜியோ நிறுவனத்தில் Google நிறுவனம் 7.73% பங்குகளை வைத்துள்ளது. இதேபோல Share chat நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கலாம்.

இந்த நிறுவனத்தை வாங்கினால் இந்தியாவில் சிறிய நீளம் கொண்ட ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு பிரபலமான இந்த நிறுவனத்தில் பெரிய அளவு லாபம் அடையலாம். குறிப்பாக Tik Tok நிறுவனம் இல்லாத சமயம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

இந்த நிறுவனம் 160 மில்லியன் மாத பயனர்களையும், 15 இந்திய மொழிகளிலும் இயங்குகிறது. இதை IIT மாணவர்கள் சிறிதாக உருவாக்கி தற்போது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

இதற்கு போட்டியாளர்களாக Times Internet நிறுவனத்தின் MX TakaTak, Daily Hunt நிறுவனத்தின் Josh, Facebook நிறுவனத்தின் reels ஆகிய போட்டியாளர்கள் உள்ளார்கள். இவ்வளவு போட்டியாளர்கள் இருந்தாலும் இந்த Share chat தலைசிறந்த நிறுவனமாக உள்ளது. இதன் காரணமாகவே Google நிறுவனம் இந்த நிறுவனத்தின் மீது அதிக ஈர்ப்பில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.