மரக்காணம் : கடல் நீரை ஸ்ட்ரா போட்டு உரியும் மேகங்கள்.! வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.! 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் கடலுக்குள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மேகங்கள் திடீரென வானத்திலிருந்து தாழ்வாக இறங்கியது. 

அப்போது, கடல் நீர் கண் இமைக்கும் நேரத்தில் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது. இதைப்பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  சுமார் அரை மணிநேரம் வரை மேகக்கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது, ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலில் வீசும் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் ‘நீர்த்தாரைகள்’ எனப்படும் இந்த அதிசய நிகழ்ச்சி ஏற்படும். பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் பருவநிலை மாற்றம் ஏற்படும் போது நடைபெறும். 

அதன் பின்னர் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, இது மறைந்து விடும். இந்த நிகழ்வின் போது கடலின் நீர் மிக வேகமாக உறிஞ்சப்பட்டு பின்னர் மேகமாக மாறி விடும். 

இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகளவில் தோன்றும்” என்றுத் தெரிவித்தார். மரக்காணம் கடல் பகுதியில் நடைபெற்ற இந்த அதிசய நிகழ்வு மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.