சீனாவில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து; பலர் காயம்


சீனாவில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் (Zhengzhou) நகரில் உள்ள Zhengxin Huanghe பாலத்தில் இன்று (புதன்கிழமை) காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கார்கள், டிரக்குகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி நொறுங்கி கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் மற்றும் வீடியோக்களில் காணமுடிகிறது.

சீனாவில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து; பலர் காயம் | 400 Vehicles Crash China Bridge Heavy FogAn aerial photo of a multi-vehicle crash on Zhengxin Yellow River Bridge in Zhengzhou / AFP via Getty Images

பனிமூட்டத்தால் காலையில் தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66 வீரர்களும் உடனடியாக பாலத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வாகனங்களுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழப்புகள் குறித்து மேலும் விவரங்கள் எதுவும் இல்லை.

Zhengzhou உட்பட பல பகுதிகளில் பார்வைத்திறன் இன்று காலை 500 மீட்டருக்கும் (1,640 அடி), சில பகுதிகளில் 200 மீட்டருக்கும் குறைவாக இருந்தது என்று உள்ளூர் வானிலை ஆய்வு சேவை தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.