
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்தி தற்போது தனது 25வது படமான ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதை ராஜு முருகன் இயக்குகிறார். இந்நிலையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கார்த்தி நடிக்க இருக்கிறார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களுக்கு பின் இடையில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு கதையை இயக்கினார். முழுநீள படமாக 7 ஆண்டுகள் கழித்து நலன் குமாரசாமி மீண்டும் இப்போது தான் படம் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஸ்டூடியோ க்ரீன் தாயரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்தின் பூஜை வருகின்ற பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ளது.