டெல்லி: பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெள்ளா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து சத்ய நாதெல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , பிரதமருடனான தனது சந்திப்பை […]
