ஓடிடி படங்களை தணிக்கை செய்ய வேண்டும்: கவுதமி கருத்து

தமிழக தணிக்கை குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார் நடிகை கவுதமி. தற்போது அவர் ஸ்டோரி ஆப் திங்க்ஸ் என்ற மினி வெப் தொடரில் நடித்துள்ளார். இன்று அந்த தொடர் வெளியாகி உள்ளது. 5 தனித்தனி கதைகள் கொண்ட இந்த தொடரை ஜார்ஜ் ஆண்டனி இயக்கி உள்ளார். இதில் பரத், அதிதி பாலன், லிங்கா, வினோத் கிஷன், ரித்திகா சிங், ரோஜா, உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் நடித்திருப்பது குறித்து கவுதமி கூறியிருப்பதாவது: எனக்கு நடிப்பை பொறுத்தவரை அது சினிமாவா, சின்னத்திரையா, ஓடிடி தளமா என்று பார்ப்பதில்லை. நல்ல கதையா? அதில் நல்ல கேரக்டரா? அந்த கேரக்டரை என்னால் செய்ய முடியுமா? என்று மட்டுமே பார்க்கிறேன். அப்படியான ஒரு கேரக்டர் இந்த தொடரில் அமைந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

ஓடிடி தளங்கள் என்பது சினிமாவின் இன்னொரு வடிவம், தொலைக்காட்சியை ஏற்றுக் கொண்டதைப்போல இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு பல திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, நல்ல கதையசம்முள்ள சிறு படங்களுக்கு நல்ல களமாக அமைந்துள்ளது.

என்றாலும் ஓடிடி படைப்புகளுக்கு தணிக்கை இல்லை என்பதால் அதனையே சிலர் தங்களுக்கான சலுகையாக எடுத்துக் கொண்டு வரம்பு மீறிய காட்சிகள், வசனங்களை இடம்பெறச் செய்கிறார்கள். இதனை தடுக்க ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வரலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.