அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 250 அடி பள்ளத்தாக்கில் வேண்டுமென்றே காரை கவிழ்த்தி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
250 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மேஷ் பட்டேல்(41) என்ற கணவர், தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் டெஸ்லா காரில் செங்குத்துப் பாறைகள் நிறைந்த டெவில் ஸ்லைடு மலைப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென கட்டுப்பாடு இல்லாமல் பாய்ந்த கார் 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவரின் தீய எண்ணம்
இதையடுத்து இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் பட்டேல் உள்நோக்கத்துடன் காரை ஓட்டி வந்ததும், காரை வேண்டுமென்றே பள்ளத்தாக்கிற்குள் கவிழ்த்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அத்துடன் முந்தைய நாள் தனது மனைவியுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பழிவாங்கும் விதமாகவே, மனைவி இரண்டு குழந்தைகள் என குடும்பத்துடன் சேர்ந்து உயிரிழப்பதற்கு கணவர் பட்டேல் முடிவு செய்திருந்தது தெரிய வந்துள்ளது.
This afternoon, deputies responded to a solo vehicle over the side of Hwy 1 south of the Tom Lantos tunnel. Two adults suffered non-life threatening injuries and two children were unharmed. Tremendous collaborative effort btwn SMSO, @CHP_GoldenGate and @calfireSCU pic.twitter.com/sVyKp6LSrc
— San Mateo County S.O (@SMCSheriff) January 3, 2023
இது தொடர்பாக கலிபோர்னியாவின் வனம் மற்றும் தீயணைப்பு துறையின் அதிகாரி பிரையன் பொடிங்கர் பேசுகையில், இவ்வாறு உயரம் நிறைந்த பகுதியில் இருந்து கீழே விழுந்த பின் உயிர் பிழைப்பது கடினம், ஆனால் இந்த இரண்டு குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்து உள்ளன. அதன் பின்பே எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீய வேளையை முன்னெடுத்த கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளின் தந்தையான பட்டேல் மீது கொலை மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.