வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2016-17 ம் ஆண்டில் விதியை மீறி செய்த அரசியல் விளம்பரங்களுக்காக 164 கோடியை வழங்க, 10 நாட்கள் அவகாசம் வழங்கி ஆம் ஆத்மிக்கு டில்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு தனது சாதனைகளை விளக்கி விளம்பரம் செய்து வருகிறது.
டில்லி கவர்னர் வி.கே.சக்சேனா, 2015-2016 ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.99.31 கோடியை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்குமாறு டில்லி தலைமைச் செயலாளருக்கு கடந்த டிசம்பர் 19ம் தேதி 2022 அன்று உத்தரவிட்டார்.
கவர்னரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, டிஐபி அசல் ரூ.99.31 கோடியும், வட்டியாக ரூ.64.31 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.163.62 கோடியை மீட்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஆம் ஆத்மிக்கு, டில்லி அரசின் தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கடித்ததில் கூறியிருப்பதாவது: 2016-17 ம் ஆண்டில் விதியை மீறி செய்த அரசியல் விளம்பரங்களுக்காக 164 கோடியை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
ஆம் ஆத்மி பணம் செலுத்தத் தவறினால், கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைப்பது மற்றும் கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளது.

இது துணை முதல்வர் மணீஸ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து பா.ஜ., மாநிலங்களின் முதல்வர்களின் விளம்பரங்கள் டில்லியின் செய்தித்தாள்களில் வெளியிடப்படுகின்றன. டில்லி முழுவதும் பா.ஜ., முதல்வர்களின் புகைப்படங்களுடன் அரசாங்க விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவர்களின் செலவுகள் பாஜக முதல்வர்களிடம் இருந்து வசூலிக்கப்படுமா? அதனால்தான் டில்லி அதிகாரிகளை அரசியல் சட்ட விரோத கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக விரும்புகிறதா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement