வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சபரிமலை :”கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு கால வருமானம் ரூ.310 கோடியாக உயர்ந்துள்ளது,” என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சபரிமலையில், மகர ஜோதி தரிசனத்துக்கு நிறைய கூட்டம் வரும் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும். அரவணை அனைவருக்கும் கிடைக்க தேவசம்போர்டு முயற்சிக்கிறது.
![]() |
மண்டல காலத்தில் பக்தர்கள் வாயிலாக 231.55 கோடி ரூபாயும், மகரவிளக்கு காலத்தில் ஜன., 12 வரை 78.85 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது கேரளாவை சேர்ந்த ஸ்ரீகுமாரன் தம்பிக்கு நாளை நடக்கும் விழாவில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement