லூதியானா: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை காலையில் காலமானார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பஞ்சாபின் ஃதேகர் பகுதியில் உள்ள சிர்ஹிந்த் பகுதியில் கடந்த புதன்கிழமை இருந்து தொடங்கியது. லூதியானா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் ஜலந்தர்தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுக்ரி பங்கேற்றார். யாக்திரை பல்லூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சந்தோக் சிங் சவுத்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பக்வாராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
சந்தோக் சிங் சவுத்ரி மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர், “ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணத்தால் நான் மிகவும் வருத்தமடைகிறேன். கடவுளிடம் அரவது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “மக்களவை எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தனது நீண்ட பொது வாழ்வில் அவர் எப்போதுமே பொது நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கே குரல் கொடுத்துள்ளார். சபையில் அவரின் ஒழுக்கம் அவரது ஆளுமையின் தனி சிறப்பு. கடவுள் அவரது ஆன்மாவுக்கு இளைப்பாறுதல் தரட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.