ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி? அதிமுகவா, தமாகாவா? யுவராஜா விளக்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டதால் அதிமுக கூட்டணியில் மீண்டும் தொகுதியை கேட்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக மருத்துவ மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு கையேடு இலவசமாக வழங்கும் விழா நடைபெற்றது. அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கான இலவச நீட் கையேடுகளை வழங்கினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுளது. ஆறு மாத காலத்துக்குள் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் யுவரஜா.

அவர் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திமுக ஏதாவது ஓரு இடத்தில் அனிதா நீட் தேர்வு பயிற்சி மையம் ஆரம்பித்தார்களா என்று கேள்வி எழுப்பினார்.

திமுக தற்போது கவர்னரை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் , தேர்தல் வரும்போது எல்லாம் திமுக தமிழை வைத்து நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த யுவராஜா , ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்ததாகவும் , கிழக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டதால் மீண்டும் தொகுதியை கேட்போம் என்றார்.

கிழக்கு தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தால் போட்டியிடுவோம் என்றும் இல்லையென்றால் கூட்டணி கட்சி வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.