புதுடெல்லி: இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக ஒன்றிய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) கூறி உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த ஒரு மாதத்தில் நாடு முழுவதும் விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் நடத்திய சோதனையில் 18,600 பிஎஸ்ஐ தரக்குறியீடு இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக டிவிட்டர் பயனாளி கேட்ட கேள்விக்கு சிபிஐசி அளித்துள்ள பதிலில், ‘பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என தெரிவித்துள்ளது.
