குஷ்பு காட்சிகள் நீக்கம் ஏன்? எடிட்டர் விளக்கம்

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் சமீபத்தில் வெளியானது, இதில் அவருடன் ஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் குஷ்பு நடித்திருந்தபோதும் அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. விஜய் படத்தில் நடித்தது பற்றி குஷ்பு பெருமையோடு குறிப்பிட்டிருந்தார், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யும் அக்கா குஷ்புவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குஷ்பு காட்சிகள் நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதுகுறித்து படத்தின் எடிட்டர் கே.எல்.பிரவீன் கூறியிருப்பதாவது: நடித்தும் படத்தில் இல்லாதவர்கள் என்னை பார்த்தால் கொன்று விடுவார்கள். அந்த அளவிற்கு என்மீது கோபத்தில் இருப்பார்கள் என்பது தெரியும். அவர்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்பாராத விதமாக அந்த காட்சிகள் நீக்க வேண்டியதாயிற்று. மீண்டும் தியேட்டரில் அந்த காட்சிகளை சேர்த்து விடலாம் என்று நம்பிக்கையில் இருக்கிறோம். இதுகுறித்து இயக்குனர் வம்சி குஷ்புவிடம் பேசிவிட்டார். குஷ்புவும் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். படத்தின் நீளம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. என பிரவீன் கே எல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.