திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் சர்ப்பக் காவடி எடுத்து வர அனுமதி கிடையாது. மேலும் திருக்கோயிலைச் சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் யாரும் பட்டம் விட அனுமதியில்லை. மீறுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
