ஐஸ்கிரீமில் தவளை..3 குழந்தைகளுக்கு வாந்தி..ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மதுரை டி.வி.எஸ் நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை தெரு பகுதியைச் சேர்ந்த சேதுபதி-மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்பு செல்வம்., தமிழரசன் இருவருக்கும் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

அன்புச் செல்வம் ஜனனிஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது நித்ரா ஸ்ரீ(8)., ராட்சன ஸ்ரீ(7) என 2 மகள்கள் ஒரு மகன் என 3 குழந்தைகள். அதேபோல் தமிழரசனுக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தாரணி ஸ்ரீ(3) வயதில் ஒரு மகள். நேற்று கூட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று காலை சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.

காலை 11 மணியளவில் கோவில் அருகே இருந்த ஒரு சிற்றுண்டி கடையில் ஐஸ்கிரீம் வாங்கி குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். அதில் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது இதை கண்ட குழந்தை நித்ரா ஸ்ரீ தந்தை அன்பு செல்வத்திடம் கூறவே உடனடியாக குழந்தையை அருகில் இருந்தால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

உடனடியாக 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களுக்கு அங்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில் கோவில் எதிரே உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் தவளை உயிரிழந்த நிலையில் கிடந்த ஐஸ்கிரீமை உண்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.