சாதி பாகுபாட்டை கடவுள் உருவாக்கவில்லை- ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பேச்சு!

மும்பையில் ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடைபெற்ற புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸ்-ன் 647 பிறந்தநாளில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. மேலும், உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு கிடையாது.

இவர்கள் மேல் சாதி, இவர்கள் கீழ் சாதி என்ற அடிப்படை அற்ற ஒரு பழக்கத்தை உருவாக்கியவர்கள் பண்டிட்களே என்று கூறியுள்ளார். இறைவன் முன் அனைவரும் சமமே. அவரவர் மதங்களை கொண்டாடும் போது, அடுத்தவர்களின் மதங்களை இழிவு படுத்தாமல் செயல்பட வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

காசியில் இந்துக்களின் கோயில்கள் இடிக்கப்பட்டபோது, அவுரங்கசீப்-பிற்கு, சத்ரபதி சிவாஜி எழுதிய கடிதத்தில்; இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இருவரும் கடவுளின் பிள்ளைகளே. இவர்கள் இருவருக்கும் ஒற்றுமையாக விரோதம் இல்லாமல் செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் அன்போடும், மரியாதை கொடுத்ததும் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல், இந்துக்கள் மீது விரோத போக்கு என்பது இனி வர கூடிய நாட்களில் தொடர்ந்து நடக்குமேயானால் நான் என் வாளுக்கு வேலை கொடுக்க வேண்டியது இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இந்தியாவில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்; மனிதர்கள் செய்யும் வேலையில், தொழிலில் உயர்ந்தது சிறியது என்று பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும். அப்படி பார்க்கும் மனப்பான்மையால் தான் உலகில் வேலைவாய்ப்பின்மை என்பது நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். சமூகத்தின் நன்மைக்காக அனைவரும் வேலை செய்து வருகின்றனர். இதில் உயர்வு தாழ்வு என்று பார்க்க வேண்டியது இல்லை என குறிப்பிட்டார்.

உடல் உழைப்பு ஒண்டு செய்யும் வேலையாக இருந்தாலும் சரி, திறமையால் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி அல்லது கடின உழைப்பால் செய்யும் வேலை, புத்தியால் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அனைத்தும் மதிக்கப்பட வேண்டியவை.

அனைவரும் வேலையின் பின்னால் ஓடுகின்றனர். இங்கு அரசு வேலைவாய்ப்புகள் 10%, தனியார் வேலைவாய்ப்புகள் 20% இருக்கும். எந்த ஒரு சமூகமும் 30 சதவீதத்திற்கும் மேல் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது.

பாத்திரங்களை துலக்கி தன் வாழ்வாதாரத்தை நடத்தி வந்த ஒருவர், அவரது சொந்த உழைப்பில் 28 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா கடையை திறந்தார். சொந்த தொழிலை செய்தார். ஆனால், இளைஞர்கள் இன்று வேலைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கின்றனர். முதலாளிகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராத போதும் அவர்கள் தொடர்ந்து வேலைக்காக அலைந்து கொண்டு இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்யும் இளைஞர்கள் பலர், நன்றாக சம்பாதித்தும் கூட திருமணம் ஆகாத நிலை என்பது தொடர்ந்து வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.