நந்தனம் மெட்ரோ ஸ்டேஷன்: பயணிகளுக்கு இப்படி ஒரு சிக்கலா? ரொம்ப லேட் ஆகுதாம்!

தலைநகர் சென்னையில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பீக் ஹவர்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறையும், மற்ற நேரங்களில் 10, 15 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். தினசரி அலுவலகத்திற்கு செல்வோர் அதிக அளவில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

நந்தனம் மெட்ரோ நிலையம்

நீல வழித்தடத்தில் தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில்

நிலையம் காணப்படுகிறது. இது அண்ணா சாலையின் கீழ் அமைந்துள்ளது. இந்த சாலையின் இருபுறங்களில் இருந்தும் ரயில் நிலையத்திற்குள் செல்லலாம். ஒருபுறம் தேவர் சிலை பகுதி, மற்றொரு புறம் வெங்கட் நாராயணா சாலை என இரண்டு நுழைவு வாயில்கள் இருக்கின்றன.

மெட்டல் டிடெக்டர்

இதில் பயணிகளை பரிசோதிக்கும் வகையில் ஆட்டோமேட்டிக் ஸ்கேனர்கள் இடம்பெற்றிருக்கும். முதலில் பயணிகளின் உடல் முழுவதும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்வார். அதன்பிறகு உடைமைகளை சரிபார்க்க நகரும் வகையிலான ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்று அமைந்திருக்கும். அதில் உடைமைகளை வைத்து விட்டால் போதும்.

உடைமைகள் பரிசோதனை

தானாக நகர்ந்து மறுபுறம் சென்றுவிடும். இதை அப்படியே ஸ்கேன் செய்து கணினி திரையில் ஒரு ஊழியர் கவனித்து கொண்டிருப்பார். பயணிகள் கொண்டு வரும் பொருட்களில் தடை செய்யப்பட்டவை அல்லது ஆபத்தானவை எதும் இல்லை எனில் பிரச்சினையும் இல்லை. அப்படியே விட்டுவிடுவர். ஆயுதங்கள், கூர்மையான பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு வந்தால் அதற்கான காரணம் கேட்பர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

நம்முடைய ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணத்தின் விவரங்களை சேகரித்து கொள்வர். பெரிய அளவில் பிரச்சினை வராது என்று தெரிந்தால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் அனுமதிப்பர். இல்லையெனில் உள்ளே அனுமதி மறுக்கப்படும். இத்தகைய நடைமுறை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பார்க்கலாம்.

ஒருபுறத்தில் சிக்கல்

இந்நிலையில் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில்

யின் நுழைவு வாயில் வழியாக செல்லும் போது பயணிகளின் உடைமைகளை சரிபார்க்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் இயந்திரம் இல்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அனைவரது பைகளையும் திறந்து பார்த்து சோதித்து வருகிறார்.

பயணிகள் கோரிக்கை

இது விரைவாக அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பீக் ஹவர்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இத்தகைய சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.