கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளி அருகே ராணுவ வீரர் ஒருவர் வந்த காரின் முன்னால் அரசு பேருந்து சென்றுள்ளது. அப்போது, அந்த பேருந்தை முந்தி செல்வ வேண்டும் என்று ராணுவ வீரரின் வாகனம் முயன்றுள்ளது.
ஆனால், பேருந்து வழி விடாமல் ராணுவ வீரர் வந்த காரின் முன்னாலேயே சென்றுள்ளது. ராணுவ வீரரின் காரும் தொடர்ந்து பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்து வந்துள்ளளது.
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராணுவ வீரர், ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக கூறி, அரசு பேருந்து ஓட்டுனரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி வந்து ராணுவ வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், ராணுவ வீரர் தன்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் தான் வாகனத்தை எடுப்பேன் என்று பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக அங்கிருந்த பொதுமக்களும் திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், ராணுவ வீரரும் வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.