
பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா
தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் இசை விழா நடைபெற்றதை அடுத்து, சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் இசை வெளியீடு வருகிற 18ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 30ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதோடு இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சில பாடல்களை பாட உள்ளார். இந்த இசை விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், தற்போது தாய்லாந்தில் இருக்கும் சிம்பு இந்த படத்தின் இசை விழாவிற்காக சென்னை திரும்ப இருக்கிறார்.