சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்குஏற்கனவே 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு குழுமி உள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த நிலையில், அங்கு பாதுகாப்புக்கு மொத்தம் […]
