ஈரோட்டில் பரபரப்பு.! ஒரே சேலையில் 3 வயது மகனுடன் தூக்கில் தொங்கிய தாய்.!

ஈரோடு மாவட்டத்தில் 3 வயது மகனுடன் ஒரே சேலையில் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிடம் மேஸ்திரி செல்வராஜ். இவரது மனைவி சரிதா (29). இவர்களது மகன் பவன் கிருத்திக் (3). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை செல்வராஜ் வீட்டிற்கு வந்தபோது, மனைவி சரிதாவும், மகன் பவன் கிருத்திக்கும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணையில், குழந்தைக்கு விஷத்தை கொடுத்துவிட்டு பிறகு மகனுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரிதாவுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆவதால் இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ மேல்விசாரணை நடத்தி வருகின்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.