சுரேந்திரநகர் : குஜராத்தில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோடசா நகரில் இருந்து, ராஜ்கோட்டுக்கு மினிவேனில் நான்கு பேர், நேற்று பயணம் செய்தனர்.
சுரேந்திரநகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் நின்ற லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement