சேலம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் மாநகர் காவல்துறைக்கு சொந்தமான ரோந்து வாகனம் நேற்று இரவு திடீரென காணாமல் போனது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சேலம் மாநகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்பொழுது காவல்துறையினரின் சின்னம் மற்றும் அரசு சின்னம் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று சேலம் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. சேலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வாகனத்தில் உள்ள எண் போலியான தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அயோத்தியாபட்டினம் பகுதியில் போலி எண் கொண்ட வாகனம் சுற்றி வருவது தெரியவந்ததை அடுத்து அஸ்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலின் அடிப்படையில் போலி பதிவு எண் கொண்ட வாகனத்தை சுற்றி வளைத்த அஸ்தம்பட்டி போலீசார் காரை ஓட்டிச் சென்ற மதன் குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காவல்துறையினரின் ரோந்து வாகனத்தை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த தகவலின் படி சூரமங்கலத்தில் இருந்த சேலத்தில் திருடப்பட்ட போலீஸ் வாகனத்தை மீட்ட காவல்துறையினர் அவரிடம் உள்ள போலி பதிவில் கொண்ட வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.