சிறுநீரக மாற்று ஆபரேஷன் சக்சஸ்; சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் லாலு: தானம் கொடுத்த மகள் உருக்கம்

பாட்னா: லாலுவின் சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததால், அவர் சிங்கப்பூரில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு கடந்தாண்டு டிசம்பரில் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சிறுநீரகங்களில் ஒன்றை தனது தந்தைக்கு தானமாக வழங்கியதால், லாலுவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது தொடர் கண்காணிப்பில் இருக்கும் லாலு, விரைவில் இந்தியா திரும்ப உள்ளார். இதுகுறித்து தனது தந்தை லாலுவுடன் இருக்கும் புகைப்படத்தை ரோகிணி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘எனது மதிப்பிற்குரிய தந்தை லாலு, பிப். 11ல் (இன்று) சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருகிறார். ஒரு மகளாக எனது கடமையை நிறைவேற்றினேன். தற்போது அவர் குணமடைந்ததால் இந்தியா அனுப்புகிறேன். அங்கு அவரை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தந்தையை ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்களது பொறுப்பு’ என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.