அகர்தலா: திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு வாக்குப்பதிவு இயந்திரகள் அனுப்பும்பணி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 60தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி (நாளை) 16-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி மாலை 4மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் […]
