சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 04.02.2023 முதல் 17.02.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,09,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையை அழகுபடுத்த பலகோடி ரூபாய்களை தமிழ்நாடு அரசு செலவழித்து வருகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக, பொதுமக்கள், […]
