தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!! தொடர்ந்து 3 மாதம் ராகிங்… மருத்துவ மாணவி தற்கொலை… சக மாணவர் கைது!!

தெலங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில் காக்கத்தீயா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில், ப்ரீத்தி என்ற மாணவி முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் ஆசிப் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிப் தன்னை ராகிங் செய்வதாக ப்ரீத்தி பெற்றோரிடம் பலமுறை புகார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ப்ரீத்தியின் பெற்றோர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். … Read more

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் ?

திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதாகும். பின்னர் தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சிக்கு வந்து பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது . ஆனால் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை என்பதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. தமிழக அரசிடம் போதிய நிதி இல்லாததே இதற்கு காரணம் என்றும் ஆனால் நிச்சயம் இத்திட்டத்தை அரசு நிறைவேற்றும் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக எதிர்கட்சியினரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு குளறுபடி| மறுதேர்வுக்கு மறுப்பு – ஆணையத்துக்கு இழுக்கு!

இப்படியும் ஒரு விளக்கமா..? என்று வியப்பில் ஆழ்த்துகிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு. கூடிப் பேசி, ‘ஆலோசித்து’ தரப்பட்டுள்ள விளக்கம், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது; மேலும் பல கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது. பிப்.25 அன்று நடந்த முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட மோசமான குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பார்த்தால், ஆணையம் அதற்கு முற்றிலும் எதிர்திசையில் பயணிக்கிறது. அதாவது, மேலும் பல சிக்கல்களை தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கிறது. ‘முற்பகலில் நடைபெற்றது கட்டாயத் தமிழ்த் தகுதித் … Read more

மோசடியைத் தடுக்க விரல் ரேகை மூலம் ஆதார் விவரம் சரிபார்க்க புதிய பாதுகாப்பு வசதி

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, குடிமக்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கும் நோக்கில் ஆதார் அட்டை திட்டத்தை முன்னெடுத்தது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் தகவலை உறுதி செய்ய ஆதார் அட்டை முதன்மையான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆதாருக்கு என்று அமைக்கப்பட்ட ஆணையமான யுஐடிஏஐ, ஆதார் அட்டை வழியான தகவல் சரிபார்ப்பு சார்ந்து புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Source link

சுறா மீன் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட காணாமல் போன மனிதன்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

அர்ஜென்டினாவில் காணாமல் போன 32 வயது நபர் ஒருவர் சுறா மீனின் வயிற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுறா மீன் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் டியாகோ பாரியா(32) என்ற நபர் சமீபத்தில் காணாமல் போனதை தொடர்ந்து அவரை தேடும் பணி விரிவாக நடத்தப்பட்டது, இருப்பினும் அதிகாரிகளால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அறிக்கைகளின் படி,  டியாகோ பாரியா(32) இறுதியாக பிப்ரவரி 18 அன்று அர்ஜென்டினாவின் தெற்கு சுபுட் மாகாணத்தின் கடற்கரைக்கு அருகில் தனது … Read more

கன்னியாகுமரியில் சிறிய விமானநிலையம்: ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

நாகர்கோவில்: ‘கன்னியாகுமரியில் சிறிய அளவிலான விமானநிலையம் அமைய வாய்ப்புள்ளது’ என்று ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: புதிதாக 50 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சிறிய அளவிலான விமான நிலையம் அமைய வாய்ப்பு உள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியில் எந்தவித குறைவும் செய்யப்படவில்லை. 2047-ல் பொருளாதார ரீதியாக இந்தியா … Read more

சிறார் பாதுகாப்பு குறித்த தேசிய மாநாடு

புதுடெல்லி:  தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் ஆன்லைன் சிறார் பாலியல் துஷ்பிரயோக பொருட்களின் விளைவுகள் மற்றும் அச்சுறுத்தலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த மாநாட்டில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கிறார்