Viduthalai Part 1: வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் முதல் விமர்சனம்: வேறலெவல் சம்பவம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படம் குறித்து வெளியாகியுள்ள முதல் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

விடுதலைஇந்தாண்டு கோலிவுட் திரையுலகினரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ‘விடுதலை’ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்களில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘விடுதலை’ படத்தின் விமர்சனம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

​தனுஷ் – வெற்றிமாறன் காம்போதமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக ‘அசுரன்’ படம் வெளியானது. தமிழ் சினிமாவின் பேவரைட் காம்போவான தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ஹீரோவான சூரி’அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படம் உருவாக்கி ரிலீசுக்கு தயாராகவுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த சூரி இந்தப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்துள்ளார். ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் வெளியான விசாரணை படம் போலவே விடுதலை படமும் வித்தியாசமாக உருவாகியுள்ளது.

இசைஞானியுடன் இணைந்த வெற்றிமாறன்ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது.

​விடுதலை டிரெய்லர்இதனையடுத்து ‘விடுதலை’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது. காவல்துறையின் அதிகார திமிரில் நடக்கும் அநீதிகளையும், இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் மையமாக வைத்து ‘விடுதலை’ படம் உருவாகியுள்ளது படத்தின் டிரெய்லரிலே தெரிகிறது.

​விடுதலை பட விமர்சனம்இந்நிலையில் இந்தப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினர் ‘விடுதலை’ படத்தை பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வேறலெவலில் உருவாகியுள்ளதாக வெற்றிமாறனை பாராட்டி தள்ளியுள்ளராம் உதயநிதி ஸ்டாலின். இதனால் வெற்றிமாறனின் முந்தைய படங்களை போல ‘விடுதலை’ படமும் மெஹா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.