விண்ணில் செலுத்தப்படும் செயற்கைகோள்களை புவிவட்ட பாதையில் விட்டுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான மறுபயன்பாட்டு விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
RLV – LEX என்ற பெயரிலான இந்த விண்கலம், கர்நாடகாவின் சித்திரதுர்கா ஏரோ நாட்டிக்கல் மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமான படையுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளது.
முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இவ்வகை வாகனமானது இஸ்ரோவின் புதிய சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.