தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து கீழையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து அருகில் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் பேருந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கவும், தலா ரூ.50,000 வழங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.