16வது ஐபிஎல் சீசன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளும் 10 அணிகள் சொந்த மாநிலத்தில் 7 ஆட்டங்கள் ஆட உள்ளன. அந்தவகையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஏப்ரல் 3, 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய தேதிகளில் ஐ.பி.எல். ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வடபழனி சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐ.பி.எல். போட்டி பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 3,12,21 மற்றும் மே.10, 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 11 மணி வரையும், ஏப்.20, மே.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணி முதல் 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, பெரியார் சாலை ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.