பழங்குடியினர் குறித்த இனவரவியல் ஆய்வு; ரூ.25 கோடியில் ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதி: தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள 37 வகையான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, இனவரவியல் ஆய்வு ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்” என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 4 ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.

  • விடுதிகளில் ஏற்படும் சிறுபராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாணாக்கரின் எதிர்பாரா மருத்துவச் செலவினம் ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சென்னை மாவட்டத்தில் உள்ள 23 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டம் ரூ.3.75 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  • விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப்பதிவு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  • கல்லூரி விடுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் கற்பித்தல் அறை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • விடுதிகளில் தங்கிக் கல்வி பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கருக்கு ரூ.1 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
  • சென்னை சமூகப் பணி கல்லூரியில் (Madras School of Social Work) ரூ.2 கோடி மானியத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் (Centre for Social Justice and Equality) நிறுவப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும்.
  • அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணாக்கருக்கு உட்பயிற்சி (Internship) உதவி வழங்கப்படும்.
முதல்வரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தமிழ்நாட்டில் உள்ள 37 வகையான பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, இனவரவியல் ஆய்வு (Ethnography study) ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

  • பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் இணையதள இணைப்பு வசதி (Long Range Wireless Internet Connectivity) ரூ.10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் கண்காணிக்க திட்ட கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
  • பழங்குடியினர் குடியிருப்புகள் நவீன கிராமங்களாக உருவாக்கப்படும்.
  • பழங்குடியி மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • வீடற்ற 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடி செலவில் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நல வாரியம் மானியத்தின் மூலம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.

* மாணாக்கர் விடுதிகளில் புத்துணர்வு அளிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் மன்றங்கள் உருவாக்கப்படும்; வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித் திட்டம் இரண்டு திட்டக் கூறுகளாக திருத்தி அமைக்கப்படும்.

  • பணிபுரியும் மகளிருக்கான விடுதிகளை தமிழ்நாடு பணிபுரியும் மகளிருக்கான விடுதி நிறுவனம் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கருக்கு உயர் தொழிலநுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தாட்கோ மூலம் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையான ரூ.2.50 லட்சத்தை ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நவீனப்படுத்தப்படும்.
  • தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் திருத்தி அமைக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.