Leo: விஜய்யை பார்த்து சஞ்சய் தத் சொன்ன விஷயம்..ஷாக்கான தளபதி..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-

​இறுதிக்கட்டத்தில் லியோலியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சென்னையில் மிகப்பெரிய செட் அமைத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது. இதில் விஜய் உட்பட அர்ஜுன், மன்சூர் அலி கான் ஆகியோரும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இம்மாதம் இறுதிக்குள் முடியும் என்றும், அதன் பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து நா ரெடி என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹட்டடித்து வருகின்றது

​நா ரெடிஅனிருத்தின் இசையில் லோகேஷின் உதவி இயக்குனரான விஷ்ணுவின் எழுத்தில் நா ரெடி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை தளபதியே பாடியுள்ளது கூடுதல் சிறப்பாகும். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடல் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நா ரெடி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. அதே சமயம் நா ரெடி பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பாடலில் விஜய் புகைபிடிப்பது போல இருப்பது தான் அந்த சர்ச்சைக்கு காரணமாக இருந்து வருகின்றது. இருப்பினும் நா ரெடி பாடல் யூடியூபில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது

​கதை என்ன ?லியோ படத்தின் போஸ்டரில் ALTER EGO என குறிப்பிட்டு இருந்ததை அடுத்து இப்படத்தின் கதையை ரசிகர்கள் யூகிக்க துவங்கிவிட்டனர். அதன் படி விஜய் இப்படத்தில் லியோ மற்றும் பார்த்திபன் என் இரு கதாபாத்திரங்களில் நடிக்கின்றார் என்றும், லியோ என்ற தன் அடையாளத்தை மறைத்து பார்த்திபனாக காஷ்மீரில் சாக்லேட் பேக்டரி நடத்துபவராக விஜய் இருப்பார் என்றும் ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகின்றது.மேலும் லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடிப்பதாகவும், சஞ்சய் தத்தின் சகோதரராக அர்ஜுன் நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் லியோ திரைப்படம் விக்ரம் படத்தை போல LCU வில் உருவாகின்றதா ? இல்லை தனிப்படமா ? என்பது தான் தற்போது கேள்விக்குறியாக இருக்கின்றது.

​ஷாக்கான தளபதிஇந்நிலையில் லியோ படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகிறார். இதையடுத்து சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் நாளில் விஜய்யை சந்தித்து ஒரு விஷயத்தை கூறியதாகவும், அதை கேட்டு விஜய் ஷாக்காகிவிட்டதாகவும் பேசப்பட்டு வருகின்றது. அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் முறையாக விஜய்யை சந்தித்த சஞ்சய் தத் அவரை கட்டிப்பிடித்து, நான் உங்களை போல சிறப்பாக நடிக்க வேண்டும் என கூறினாராம். பாலிவுட்டில் பல படங்களில் தன் அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்திய சஞ்சய் தத் தன்னை போல சிறப்பாக நடிக்கவேண்டும் என கூறியதை கேட்ட தளபதி ஷாக்காகிவிட்டாராம். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் மற்றவர்களை போல சஞ்சய் தத் ஜாலியாக அனைவரிடமும் பழகி வந்தாராம். மேலும் லோகேஷின் இயக்கம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, லோகேஷை தன் மகன் என்றுதான் அழைத்து வருகிறாராம் சஞ்சய் தத் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.