Manipur: நம் தலையில் அல்ல, காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும்: மணிப்பூர் கொடூரம் பற்றி வைரமுத்து ட்வீட்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தேய், குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த இரண்டு மாதங்களாக மோதலாக உள்ளது. இந்நிலையில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாமணாக்கி தெருவில் அழைத்துச் சென்றதுடன் அவர்களிடம் பாலியல் அத்துமீறல் செய்த வீடியோ வெளியாகி நாட்டு மக்களை பதைபதைக்க வைத்திருக்கிறது.

நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்
அந்த வீடியோவை பார்த்து அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

தெய்வம் என்பார் பெண்களை;

தேவி என்பார் பூமியை;

கடவுளின் பாகம் என்பார்

பார்வதியை

நடைமுறையில்

உடல் உரிப்பு செய்து

ஊர்வலம் விடுவார்

நம் தலையில் அல்ல

காட்டுமிராண்டிகளின்

தலையில் அடிக்க வேண்டும்

அநியாயங்களை நிறுத்துங்கள்;

அதிகாரம் உள்ளவர்கள்

களமிறங்குங்கள்

இன்னும் மணிப்பூர்

இந்தியாவில் தான் இருக்கிறது

#Manipur #மணிப்பூர் என்றார்.

வைரமுத்துவின் கவிதைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. சரியாக சொன்னீர்கள் கவிஞரே. அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்கினால் தான் இந்த கொடுமையை தடுக்க முடியும். மணிப்பூர் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறது என்று நினைவூட்ட வேண்டிய அவலம் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலரோ, மணிப்பூர் பெண்களுக்காக வைரமுத்து கவிதை எழுதியிருப்பதை பார்க்கும்போது சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் சின்மயி உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி யார் பேசுவது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வைரமுத்துவின் ட்வீட்டை பார்த்த ஒருவர், ஐயா வைரமுத்து, மணிப்பூரில் நடந்த கொடுமைகளை கண்டிக்கும் தகுதி உங்களுக்கு கிடையாது பாடகி சின்மயி உங்கள் மேல் வைத்த குற்றசாட்டு ஒன்று உள்ளது அதை மறக்க வேண்டாம் மணிப்பூரில் நடந்தது மட்டும் கொடுமையில்லை இதுவும் ஒருவகையான பெண்களுக்கு நடக்கும் கொடுமை தான் என்றார். அதை பார்த்த சின்மயி கூறியிருப்பதாவது,

நான் மட்டுமல்ல 19 பெண்கள். முக்கால்வாசி தமிழர்களின் favourite person அதனால் இவரு யார வேணாலும் sexually abuse பண்ணலாம் பரவாயில்ல என்றார்.

வைரமுத்து மீது சின்மயி உள்ளிட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். வைரமுத்து மீது புகார் தெரிவித்த தனக்கு தமிழ் திரையுலகில் வேலை செய்ய தடை, ஆனால் அவருக்கு மட்டும் மாலை, மரியாதையா என கேள்வி எழுப்பி வருகிறார் சின்மயி.

Vijay: சக்சஸ்: அரசியலுக்கு வரும் விஜய்யை தேடி வந்த குட் நியூஸ்

மணிப்பூர் சம்பவத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இயக்குநர்கள் பா. ரஞ்சித், சி.எஸ். அமுதன் உள்ளிட்டோரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.